ADVERTISEMENT

’’சீட் கொடுக்காவிட்டால் சுயேட்சையாக போட்டி...’’-மிரட்டும் மார்க்கண்டேயன்.!

09:23 PM Mar 18, 2019 | nagendran

ADVERTISEMENT

விளாத்திகுளம் தொகுதியில் எப்படியும் மார்க்கண்டேயனுக்குத் தான் 'சீட்' என்று அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் வரை நம்பி இருந்தனர். ஆனால், இப்போது அதிமுக தலைமை சின்னப்பனுக்கு 'சீட்' என்றதுமே ஜெயிக்கிற தொகுதியை ஏன் விட்டுக் கொடுக்கனும் என பரவலாக பேச்சு அடிபடுகிறது.

ADVERTISEMENT

'சாதி ரீதியாக பார்த்தால் சின்னப்பனும், மார்க்கண்டேயனும் ஒரே சமூகத்தவர் தான். ஆனால், மார்க்கண்டேயனோட அணுகுமுறை சின்னப்பன்கிட்ட எதிர்பார்க்க முடியாது. உங்க கிட்ட 5 நிமிசம் பேசினார்னா உங்களையே அப்படியே மெஸ்மெரிசம் பண்ணிடுவார் மார்க்கண்டேயன். அதே மாதிரி உதவின்னு கேட்டுப் போனால் உடனே செஞ்சு கொடுப்பார். ஆனா, இவரு (சின்னப்பன்) அதற்கு நேர் மாறான ஆள்' என்று நம்மிடம் ஆதங்கத்தை கொட்டினார் அந்த கிளைச் செயலாளர்.

அவரே தொடர்ந்து, 'இது பொதுத் தேர்தல் இல்ல தம்பி, இடைத் தேர்தல். ஆளுங்கட்சியாக இருந்துட்டு இதுல தோல்வியடைஞ்சா கட்சிக்கு தான அது அவமானம்.? இந்த பக்கம் புதூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் மார்க்கண்டேயனுக்குத் தான் செல்வாக்கு அதிகம். அதேபோல், விளாத்திகுளம் ஒன்றியத்தில பாதி கிராமங்கள்ல இவருக்கு செல்வாக்கு அதிகம். இவருக்குன்னா கட்சிக்காரங்க துணிஞ்சு களத்தில இறங்கி வேலை பார்ப்பாங்க. இப்ப சின்னப்பனுக்கு கோவில்பட்டியில் இருந்து தான் ஆட்களை கூட்டி வந்து மந்திரி கடம்பூரார் வேலை பார்க்கனும். அவங்களுக்கு உள்ளூர் நிலவரம் தெரியுமா? எந்த பார்ட்டி நமக்கு ஓட்டுப் போடும், எந்த பார்ட்டி எதிர்தரப்புக்கு ஓட்டுப் போடும்னு இங்க உள்ள கட்சிக் காரங்களுக்கு தான் தெரியும். வெளியூர் ஆட்களுக்கு என்ன தெரியும்?' என்று எதிர்கேள்வி கேட்டார்.

இந்த விவகாரம் குறித்து மார்க்கண்டேயனுக்கு நெருக்கமான நபர் ஒருவரிடம் பேசினோம். 'விளாத்திகுளம் தொகுதியில் அதிமுகவுக்கு என்று செல்வாக்கு இருக்கு. அதை மறுக்க முடியாது. ஆனால், ஜெயிக்கிற வேட்பாளரை நிறுத்தாமல், எதிர் தரப்புக்கு ஏன் தொகுதியை விட்டுக் கொடுக்கிற மாதிரி வேட்பாளரை நிறுத்தனும் என்பது தான் எங்களோட கேள்வி. நிச்சயம் இதை மார்க்கண்டேயன் லேசில விடமாட்டார். ஒன்னு சுயேட்சையாக நிற்பார். இல்லாட்டி, உள்ளடி வேலை பார்த்து தோற்கடிப்பார். இரண்டுல ஏதாவது ஒன்னு நடக்கும்.

ஏற்கனவே, இவருக்கும் கடம்பூராருக்கும் ஆகாது. இந்த நிலையில் நேர்காணலுக்கு வந்தவரிடம் மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூவை போய் பார்த்துட்டு வாங்கன்னு கட்சித் தலைமை சொல்லியிருக்கிறது. அப்படி அவர்கிட்ட போய் நின்னு 'சீட்' வாங்க வேண்டிய அவசியமில்லைனு நேரடியாகவே சொல்லிட்டு வந்திட்டார். சி.த.செல்லப்பாண்டியனோ, சண்முகநாதனோ மாவட்ட செயலாளராக இருந்து, வேறு ஒருவருக்கு சீட் கொடுத்தாலும், அதை இவர் (மார்க்கண்டேயன்) ஏத்துக்கிடுவார். ஆனால், கடம்பூரார்கிட்ட தோற்றுப் போவதை ஏற்க மாட்டார்' என்றார்.

இதற்கிடையே, சுயேட்சையாக களம் இறங்கவும் மார்க்கண்டேயன் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து ஆலோசிக்க தமது ஆதரவாளர்களை நாளை (19-03-2019) தனது வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறார். அதேபோல், டிடிவி தினகரன் தரப்பும் மார்க்கண்டேயனை தங்களது பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதனால் தான், விளாத்திகுளம் தொகுதியில் வேட்பாளரை அறிவிக்காமல் இருக்கிறது அ.ம.மு.க.!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT