ADVERTISEMENT

ராஜன்செல்லப்பாவுக்கு பதிலடி கொடுத்த அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் !

11:18 AM Jun 10, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

அதிமுகவில் உட்கட்சி குழப்பம் அதிகரித்து வரும் நிலையில் ராஜன்செல்லப்பா, சிவிசண்முகம் ஆகியோரின் குரல்களுக்கு பிறகு கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில் வெற்றி பெற்ற நேரத்தில் ஒரு மாதிரியும், தோல்வி பெற்ற நேரத்தில் ஒரு மாதிரியும் விமர்சனங்கள் சொல்வது சரியல்ல என்று ராஜன் செல்லப்பா கருத்திற்கு சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

திருச்சி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 85 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பன்நோக்கு கட்டிடம், மின்னொளி கூடைப்பந்து மைதானம், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ரவுண்டானா, கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவகம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருடைய நல்ல வழிகாட்டுதல் படி அமைச்சர்கள் உள்ளிட்ட கழகத்தினுடைய அத்தனை கோடி உறுப்பினர்களும் செயல்பட்டு வருகின்றோம். அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ, ராஜன் செல்லாப்பா கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வெற்றி, தோல்வி என்பது களத்தில் வீரனுக்கு சகஜம். வெற்றி பெற்ற நேரத்தில் ஒரு மாதிரியும், தோல்வி பெற்ற நேரத்தில் ஒரு மாதிரியும் விமர்சனங்கள் சொல்வது சரியல்ல.

மூத்த முன்னோடிகள் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இரு பெரும் தலைவர்கள் காட்டுகின்ற நல்வழிகள் படிதான் கழகம் செயல்படும். இதுவரை கழகம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அவர்களுடைய சீரிய நல் தலைமையுடன் ஆட்சியும், கழகமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் காலங்களில் வெற்றி பெற்ற பிறகும், மாபெரும் தோல்வியை சந்தித்த போதும் இது போன்ற குறைகள் ஒலிப்பது சகஜம். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அவர்களின் சீரிய வழிகாட்டுதல் படிதான் இயக்கத்தில் உள்ள அனைவரும் செயல்படுவோம்.

அதிமுக வலிவோடும் பொலிவோடும் இருக்கிறது. தோல்வியை கண்டு நாங்கள் துவண்டு விடமாட்டோம் மீண்டும் வீறு கொண்டு எழுவோம் வரலாற்று சாதனை புரிவோம் மாபெரும் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT