ADMK 50th year celebration vellamandi Natarajan addressed press

Advertisment

தமிழ்நாடு முழுவதும் அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழா நேற்று (17.10.2021) அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கொண்டாடப்பட்டது. திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு வெல்லமண்டி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “இன்றைய (17ஆம் தேதி) தினம் அதிமுக கட்சியானது தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் வாழ்நாள் முழுவதும் அதிமுகவில் தொண்டு செய்வதையே நாங்கள் கடமையாக வைத்திருக்கிறோம். நல்லாட்சி கொடுப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். இனிவரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தமிழகத்தை தன்னுடைய கோட்டையாக மாற்றிக் காட்டும். சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் தவறான வகையில் வெற்றி பெற்றுவிட்டார்கள்” என்று கூறினார்.