ADVERTISEMENT

அமைச்சரை கட்சி பொறுப்புல இருந்து தூக்கினதுக்கு அப்புறம்…?- அர்ச்சகர்- நம்பூதிரியின்‘அட்றா சக்க’உரையாடல்!

04:03 PM Apr 10, 2020 | santhoshb@nakk…

சென்னை வரை அரசியல் தலைவர்களோடு தொடர்பிலுள்ள திருச்செந்தூர் அர்ச்சகர் ஒருவரும், கேரள நம்பூதிரி ஒருவரும், எதேச்சையாக அந்தக் கோவிலில் சந்தித்துக்கொண்டார்களாம். அப்போது, நண்பர் ஒருவர் உடன் இருந்திருக்கிறார். அவ்விருவரும் பேசிக்கொண்டதை, அப்படியே நம்மிடம் ‘ரிபீட்’ செய்தார்.

ADVERTISEMENT


“தெய்வ விக்கிரகங்களுக்கு கற்பூர தீபாராதனை காட்டுறதுதானே வேலை? சாப்பிட்டு நல்லாத்தானே இருக்காங்க. எங்கள பத்தி பொதுவா இப்படித்தான் பேசுவாங்க. ஆனா.. அந்த அமைச்சர், எங்களோட கஷ்ட நஷ்டத்த தெரிஞ்சு, இந்த கரோனா பீரியட்ல சிவகாசி பக்கம் இருக்கிற அர்ச்சகர்களுக்கு நிதியுதவி அளிச்சிருக்காரு. அம்மாவும் (ஜெயலலிதா) எங்கள பார்த்துப் பார்த்து கவனிச்சாங்க. அவரோட வழில இவரு நடக்கிறாரு. இவரோட ஜாதகக் கட்டத்த பார்த்துத்தான்.. அம்மா இவரை எம்.எல்.ஏ. ஆக்கினாங்க. மாவட்ட செயலாளர் ஆக்கினாங்க. அமைச்சராவும் ஆக்கினாங்க. அப்ப அமைச்சர் மேல சொத்துக்குவிப்பு புகாரெல்லாம் வந்துச்சு. அம்மா பெரிசா கண்டுக்கல. ஏன்னா.. தன்னைப் போலவே, தனக்கென்று குடும்பம் குட்டி எதுவும் இல்லாம வாழற மனுஷன்ங்கிற கரிசனம்தான். திருமணமே நடக்காத அம்சம் உள்ள ஒருத்தர், தன்னோட அமைச்சரவைல இருக்கணும்கிறதுல அம்மா ரொம்ப தெளிவா இருந்தாங்க. அமைச்சரோட நல்ல மனசுக்கு அவரு ஒரு குறையும் இல்லாம வாழணும். ஆனாலும், திருஷ்டி கழிச்ச மாதிரி அவரோட மாவட்ட செயலாளர் பொறுப்பை இப்ப பறிச்சிட்டாங்க..”

அர்ச்சகர் வேதனையோடு சொல்ல, அவரிடம் கேரள நம்பூதிரி

ADVERTISEMENT

“அமைச்சர்கிட்ட இருந்து என்னைக்கு மாவட்ட செயலாளர் பதவிய பறிச்சாங்க?”

“22-ஆம் தேதி கரெக்டா 4-30 மணிக்கு..”

“எடுத்த பிறகு சி.எம். எங்கே போனாரு?”

“அஞ்சு மணிக்கு வெளிய வந்து கை தட்டினாரு.. அன்னைக்கு ஊரடங்குல்ல. அதான்.. கை தட்டணும்னு கை தட்டினாரு.”

“அதுக்கு அப்புறம், அவரு சந்தோஷமா வேற எந்த நிகழ்ச்சிக்காவது போயிருக்காரா?”

“அமைச்சர்கிட்ட இருந்து மாவட்ட செயலாளர் பொறுப்பை பறிச்ச பிறகு, வேற எந்த நிகழ்ச்சிக்கும் சி.எம். போகல.”


“அமைச்சரை கட்சி பொறுப்புல இருந்து தூக்கினாங்கள்ல. கட்சி ஆபீஸ் இப்ப எப்படி இருக்கு?”

”அன்னைக்கு அஞ்சு மணிக்கு பூட்டினதுதான். இப்ப வரைக்கும் திறக்கல.. யாரும் வேலைக்கு வரல..”

“23-ஆம் தேதி சட்ட சபை நடந்துச்சா? அமைச்சர் போனாரா?”

“சட்ட சபை நடந்துச்சு.. ஆனா.. அமைச்சர் போகல.. நாலஞ்சு ஃபைல்ல கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டு அன்னைக்கு வீட்டுக்கு போயிட்டாரு..”

“அமைச்சர் சட்ட மன்றத்துக்கு போகாதது செய்தியா பேப்பர்ல வந்துச்சா?”

“ஆமா.. செய்தி வந்துச்சு..”

“மறுநாள், அமைச்சர் சட்ட மன்றத்துக்கு போனாரா?

“மாநில கோரிக்கைல.. அதான் போயிருக்காரு. அன்னைக்கு ஒரே நாள்ல எல்லா கோரிக்கையயும் வச்சி 2-30 மணிக்கு முடிச்சிட்டாங்களாம். அமைச்சரு கிளம்பி ஊருக்கு போயிட்டாரு.”

“அதுக்கப்புறம் என்ன ஆச்சு?”

“செக்ரட்டரியட்ட இழுத்து பூட்டியாச்சு.”

”சி.எம். என்ன பண்ணுறாரு?”

“சி.எம். அவரு வாசல்ல அவரு மட்டும் போறாரு.. ஓ.பி.எஸ். ஒருத்தர் மட்டும் மேல போறாரு.. 15 நாள்ல ரெண்டு தடவ சி.எம். போறாரு. உள்ள போயி ஏதாச்சும் மீட்டிங் போடணும்னா மீட்டிங் மட்டும் போடறாரு. வீட்லதான் பெரும்பாலும் மீட்டிங் போடறாரு. யாரையும் பார்க்கிறது இல்ல. இப்ப வர்றது எல்லாமே சி.எம்.மோட பழைய கோப்பு படம்தான்.”

”ம்ஹூம். அமைச்சர் ரொம்ப தெய்வ பக்தி உள்ளவரு வேற. அவரோட கட்சி பொறுப்புல கை வச்சதுக்கு அப்புறம் கட்சி ஆபீஸ இழுத்து மூடியாச்சு. சி.எம். போற கோட்டையவும் மூடியாச்சு. வீட்டுக்குள்ள யாரையும் விடாம சி.எம். வீட்டயும் மூடியாச்சு. வீட்டுக்குள்ள இருந்து சி.எம். பேட்டி கொடுத்துட்டு இருக்காரு. எங்கயாச்சும் ரெண்டு பேர கூட்டிட்டு போயி, ஆளுங்க இல்லாத பெட்டை பார்க்கிறாரு. எந்த முதலமைச்சராவது ஆளுங்க இல்லாத பெட்டை பார்த்திருக்காங்களா? ஒரு ஆஸ்பத்திரி போறோம். நோயாளி படுத்து இருக்கிறத்தான பார்க்கணும். அவரு ஆளுங்க இல்லாத பெட்டை பார்த்தத டிவில காட்டுறாங்க. அமைச்சர கட்சி பொறுப்புல இருந்து எடுத்துட்டு என்ன சாதிக்க முடிஞ்சது? ஓ.பி.எஸ். தேனி போயிட்டாரு. விஜயபாஸ்கருக்கும் சி.எம்.முக்கும் பிரச்சனை ஆகி நிம்மதி இல்லாம இருக்காங்க. டிவில காட்டுறாங்களே.. சி.எம். முகத்துல ஒரு தெளிச்சி இருக்கா? அமைச்சருக்கு எது நல்லதோ அதை தெய்வம் பார்த்துக்கிரும்.”

“என்ன இப்படி சொல்லிட்டீங்க?”

“ஒவ்வொரு மனுஷனோட பிறப்பிலும் ஒரு அம்சம் இருக்கும். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியோட பிறப்பு அம்சத்த ஜெயலலிதா தெரிஞ்சு வச்சிருந்தாங்க.”

“உலகம் முழுக்க கரோனா பரவிட்டிருக்கு. இதுலபோயி கே.டி.ராஜேந்திரபாலாஜிய கட்சி பொறுப்புல இருந்து நீக்கினத சம்பந்தப்படுத்தி பேசுறீங்களே?”

“ஆமா.. சம்பந்தம் இருக்கு. எத்தனையோ தலைவர்கள் நாட்டை ஆண்டிருக்காங்க. அப்பல்லாம் கரோனா வரலியே? அமெரிக்காவுல டிரம்ப், அப்புறம் இங்கே மோடிஜி, தமிழ்நாட்டுல எடப்பாடி பழனிசாமி, இவங்க ஆட்சில இருக்கும்போதுதானே கரோனா வந்து மக்கள் சாவுறாங்க. உலகமே வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்கு. இது ஒரு கொடுமையான அம்சம். பொற்கால ஆட்சின்னு சொல்லிட்டு இருந்தாங்கள்ல. இனிமேல் அப்படி சொல்ல முடியுமா?”

கரோனா காலத்திலும் ‘தூணிலும் நானே; துரும்பிலும் நானே!’ என சேனல்களில் முகம் காட்டத் துடிக்கும் தலைவர்களின் அரசியல், இதனாலெல்லாம் மக்கள் மனதில் அந்தத் தலைவர்களின் முகம் பதிந்துவிடாது என்ற கேலி, பிறர் நலனை மட்டுமே கருத்தில்கொண்டு வாழ்பவர்களை கிரகங்கள்கூட எதுவும் செய்யாது என்ற ஜோதிட தத்துவம் என, அர்ச்சகரும் நம்பூதிரியும் நிறைய பேசினார்களாம்.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதென்பது இதுதானோ?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT