ADVERTISEMENT

பாஜகவுக்கு 5 தொகுதி காங்கிரசுக்கு 10 தொகுதி ; அடிமைக்கட்சி அதிமுகவா? திமுகவா? பாஜகவை வெறுப்பேற்றிய அமைச்சர்கள்

10:05 AM Feb 23, 2019 | selvakumar

"அதிமுக அமைப்பது ராஜ்ய கூட்டணி , திமுக அமைப்பது பூஜ்ய கூட்டணி" என்று நாகப்பட்டினத்தில் நடந்த அதிமுக அலுவலகத்திறப்பு விழா கூட்டத்தில் பேசினார்கள் அதிமுக அமைச்சர்கள்.

ADVERTISEMENT

அதிமுக அலுவலகம் நாகப்பட்டினம் ஈசிஆர் சாலையில் புதிதாக கட்டி ஏற்கனவே திறந்துவிட்டனர். ஆனால் திறப்புவிழா என்கிற பெயரில், விடியற்காலையில் யாகம் வளர்த்து திறப்புவிழா செய்தனர், அதே வேலையில் அங்கு ஆலோசனை கூட்டத்தையும் நடத்திவிட்டனர். ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட முழுவதிலிருந்தும் வழக்கம் போல் கூட்டம் திரட்டுவதுபோல் வேன்கள், கார்கள், மூலம் தொண்டர்களை கொண்டு வந்து குவிந்திருந்தனர். வந்தவர்களுக்கு ஆட்டுக்கறி பிரியாணியும், பாயாவும் விருந்தாக அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயகுமார் "லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 40 தொகுதியிலும் வெற்றி கிடைக்கும், அதற்கு நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதிமுக கூட்டணியில் பாமக வந்ததும் திமுக தலைவர் ஸ்டாலினால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதிமுக அமைப்பது தான் ராஜ்யகூட்டணி, திமுக அமைப்பது பூஜ்ய கூட்டணி. நாங்கள் பாஜகவிற்கு அடிமை கட்சி என்று திமுகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் இந்த நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக விற்கு வெறும் 5 தொகுதிகள் தான். ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கோ 10 தொகுதிகள். இதிலிருந்தே தெரியவில்லையா யார் அடிமை கட்சி என்று. பொங்கலுக்கு ஆயிரம் தற்போது 60 லட்சம் பேருக்கு இரண்டாயிரம் என்று அறிவித்ததுமே திமுகவினர் அலறிக்கொண்டு தேர்தலை சந்திக்க பயந்துநிற்கின்றனர்." என ஆக்ரோசமாக பேசி முடித்தார்.

நாகை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் பேசுகையில்" தமிழக அரசு சார்பில் தேசிய விநாயகம் பிள்ளை, பெரும்பிடுகை முத்தரையர், இரட்டைமலை சீனிவாசன், பழனிச்சாமி கவுண்டர், சர்ஏடி பன்னீர்செல்வம், உள்ளிட்டவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் எனவும், கர்னல் ஜான் பென்னிகுயிக், காளிங்கராயர், அழகுமுத்துக்கோன், மா. பொ. சிவஞானம், ஆதித்தனார் , ஆகியோர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருப்பது எங்களுக்கு வெற்றியை தறும்". என்றார்.

"இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான எந்த முன்மொழிவும் செய்யவில்லையே என விவசாயிகள் மத்தியில் இருக்கும் குமுறலையும் அங்கு கேட்க முடிந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT