ADVERTISEMENT

'இந்தச் சம்பவம் மட்டும் உண்மையெனில், கண்டிப்பாக முதல்வர்...' -மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி! 

09:08 PM Aug 22, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

யோகா, நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான ஆன்லைன் பயிற்சியின்போது, இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அதேபோல் அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் இதற்குக் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, "வேண்டிய நேரத்தில் நழுவிச் செல்லக்கூடியவர்கள் தி.மு.க.வினர் என்றார். அதேபோல் இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என்று ஆயுஷ் செயலாளர் கூறியிருந்தால் அது கண்டனத்திற்குரியது. இந்தச் சம்பவம் மட்டும் உண்மையெனில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்" எனவும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT