மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன். அதே தொகுதியில்திமுக கூட்டணி சார்பில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்வெங்கடேஷ் போட்டியிடுகிறார்.தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே இருக்கின்ற நிலையில் இருகட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajsan_0.jpg)
இந்தநிலையில் ராஜ் சத்யனுக்கானஅம்மாவட்ட அமைச்சர் செல்லூர் ராஜு தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளார். இந்தநிலையில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க பணப்பட்டுவாடா செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ivofqqko_cpim-venkatesan_625x300_15_March_19.jpg)
மதுரையிலுள்ள ஒரு பங்களாவில் கோடி கணக்கில் பணம் வைக்கப்பட்டு கவர்களில் பிரித்து வைக்கப்படுகிறதாம். இந்த தகவல் காவல்துறைக்கும் தெரிந்ததில் காவல்துறையையும் சரி செய்து விட்டார்களாம். மதுரையிலுள்ள ஒரு காவல்நிலையத்திலேயே கவர் பிரித்து வைக்கும் பணி நடக்கிறதாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/your-money1_0.jpg)
ராஜ் சத்யனுக்கு சீட் தரக்கூடாது என்று சொன்னஅக்கட்சியின் எதிர் கோஷ்டிதான் இந்த தகவலை கசிய விட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)