ADVERTISEMENT

‘’செய்வீர்களா..செய்வீர்களா...’’ஜெ. பாணியில்  பேசிய பிரேமலதா - முகம் சுளித்த அதிமுகவினர்

01:13 PM Apr 04, 2019 | selvakumar

ADVERTISEMENT

எப்போதுமே தேர்தல் பிரச்சாரத்தின் போது, கூட்டிவைத்திருக்கும் மக்களை பார்த்து" செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா" என்று ஜெயலலிதா கேட்பதுண்டு, அது சாமானிய மக்களிடம் எடுபட்டது. அதே பாணியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பிரச்சார வேனில் இருந்தபடி கூட்டத்தினரைப் பார்த்து "வாய்ப்பு தருவீர்களா, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வீர்களா, டெபாசிட் இழக்க செய்வீர்களா, எதிர்கட்சிகளுக்கு நல்ல பாடம் புகட்டுவீர்களா " என்று ஜெ. பாணியில் கேட்டுவருவது ஜெயலலிதா அபிமானிகளை முகம் சுளிக்கவே வைத்தது.

ADVERTISEMENT

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஆசைக்கும், நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கும் திருவாரூரில் போட்டியிடும் , திருவாரூர் இடைத்தேர்தல் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜீவானந்தத்திற்கும் ஆதரவாக வாக்கு கேட்டு சிதம்பரம் வழியாக சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட கடைவீதிகளில் பிரச்சாரம் செய்தார் பிரேமலதா.

அவருக்கு சிதம்பரம் கோவிலில் முறையான சாமி தரிசனம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு இடங்களிலும் பேசிய பிரேமலதா, "இந்த கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற கூட்டணி. ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சேர்ந்தாலே ராசியான கூட்டணி என்று 2011 இல் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போதும் 2011 வெற்றி வரலாறு மீண்டும் திரும்புகிறது. எங்களது கூட்டணி அமைய கூடாது என்று திமுக எத்தனையோ சூழ்ச்சிகளை செய்தது. அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடித்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளோம். இந்த கூட்டணி நிச்சயம் எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெறும் நாற்பதும் நமதே என்று சொல்லக்கூடிய அளவில் சரித்திரம் படைக்கும்.

துரைமுருகன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையை பார்க்கும் போது திமுக கூட்டணி ஊழல் கூட்டணி என்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். மக்கள் விரோத கூட்டணியை மக்கள் புறக்கணித்துவிட்டனர், நீங்கள் செய்வீர்களா "என்பது போலவே பேசி முடித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT