சென்னையில் செய்தியாளர்களைசந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நேற்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஒருமையில் பேசியதை தவிர்த்திருக்கலாம். பத்திரிகையாளராக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகள் தலைவர்களாக இருந்தாலும் சரி,யாராக இருந்தாலும் ஒருமையில் பேசக்கூடாது.நாங்கள் அண்ணா வழியில் வந்தவர்கள் மறப்போம் மன்னிப்போம். திமுகவை அவர் தில்லு முள்ளு கட்சி என்று கூறியுள்ளார். என்னை பொறுத்தவரை திமுகவை தில்லு முள்ளு கழகம் என்றுதான் சொல்வேன்.
37 எம்பிக்கள் இருந்ததால்தான் மேகதாது விவகாரத்தில் நமது குரலை நம்மால் உயர்த்த முடிந்தது. பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்க முடிந்தது. 37 எம்பிக்கள் இல்லை என்றால் இது நடக்குமா எனவே 37 எம்பிக்கள் இருந்தும் பயனில்லை என பிரேமலதா கூறியதை மறுக்கிறேன் எனக்கூறினார்.
.