ADVERTISEMENT

 விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார் ராமதாஸ்!

11:27 AM Mar 14, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

அதிமுக கூட்டணியில் பாமகவும், தேமுதிகவும் இணைந்துள்ளன. பாமக 7 தொகுதிகளிலும், தேமுதிக 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்றார். அன்புமணிராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட பாமக பிரமுகர்களும் ராமதாசுடன் சென்றனர்.

ADVERTISEMENT

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார் ராமதாஸ். இந்த சந்திப்பின்போது அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

கடந்த தேர்தலில்களில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்திக்கொண்டதால் இரு கட்சி தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT