ADVERTISEMENT

அ.திமு.க. பா.ஜ.க இடையே கூட்டணி கிடையாது தம்பித்துரை பேட்டி!

07:10 AM Jan 12, 2019 | sakthivel.m

ADVERTISEMENT

அ.தி.மு.க. , பாஜக இடையே எந்தவித தேர்தல் கூட்டணியும் கிடையாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்தார்.

ADVERTISEMENT

திண்டுக்கல் அருகே உள்ள டேவசந்தூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது... தமிழகத்தின் உரிமைகளை பெறுவதற்காக அ.தி.மு.க. தொடர்ந்து மக்களவை மாநிலங்களவையில் குரல் எழுப்பி வருகிறோம். அதன்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதித்தால் போராடி வாரிய அமைத்தோம்.

மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தொடர்ந்து போராடி கேட்டு வருகிறோம். மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்துக்கு சாதகமாக பா.ஜ.க. செயல்படுவதால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடர் போராட்டம் நடத்தி எங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறோம். எனவே பா.ஜ.க. அ.தி.மு.க. இடையே தேர்தல் கூட்டணி என்பது கிடையாது. ஆட்சியில் மட்டுமே தொடர்பு உள்ளது. பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களை ஆதரித்தும் எதிர்த்தும் வருகிறோம். மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நான் அ.தி.மு.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறேன் என்றும் கூட்டணி குறித்து கருத்து கூற எனக்கு தகுதி இல்லை என்றும் கூறி வருகிறார். மேலும் திராவிட கட்சிகளை ஊழல் கட்சிகள் என்றும், எடப்படி பழனிச்சாமியை செயல்படாத முதல்வர் என்றும் கூறிக்கொண்டே இருக்கிறார். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக உள்ள நான் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாது. இதுவரை கூட்டணி குறித்து அ.தி.மு.க. யாரிடமும் பேசவில்லை. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று கூறினார். பேட்டியின்போது கட்சிப்பொறுப்பாளர்கள் பலர் உடன் இருந்தனர்!

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT