ADVERTISEMENT

'கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும்'-பாமகவின் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

08:10 PM Jan 16, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்காக தமிழ்நாடு, புதுவையில் கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ''முதுநிலை மருத்துவப் படிப்புக்காக மார்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் நிரம்பி விட்டன. கடந்த சில நாட்களாக விண்ணப்பிக்கும் தமிழர்களுக்கு சொந்த மாநிலத்தில் தேர்வு மையங்கள் மறுக்கப்படுகின்றன. நீட் (பி.ஜி) தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த 7-ஆம் தேதி தொடங்கப்பட்டாலும் கூட, அதற்கான தகுதிகள் கடந்த 13-ஆம் தேதி தளர்த்தப்பட்டதால், அதன் பிறகு தான் தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் அதிகம் விண்ணப்பித்தனர். வாய்ப்பு மறுக்கப்படுவதால் அவர்கள் வெளிமாநிலங்களில் நீட் எழுதும் நிலை உருவாகியுள்ளது.

வெகுதொலைவு பயணித்து தேர்வு எழுதுவது மன உளைச்சலை ஏற்படுத்தும். அது தேர்வு செயல்பாட்டை பாதிக்கும். தமிழ்நாடு, புதுவையில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள நிலையில், இந்த இரு மாநிலங்களிலும் அதிக தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை அமைத்திருக்க வேண்டும். தேர்வு முகமை செய்த தவறால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். அதன் விவரங்கள் ஆன்லைன் விண்ணப்ப தளத்தில் பிரதிபலிப்பதை தேர்வு முகமை உறுதி செய்ய வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT