ADVERTISEMENT

மருத்துவமனையிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்!

10:03 PM Oct 31, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 25 ஆம் தேதி டெல்லியில் தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது. இதற்காக டெல்லி பயணம், விழாவில் பங்கேற்றது, பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றது, தொடர்ந்து நண்பர்கள் சந்திப்பு, வாழ்த்து பெற்றது என இருந்தார். டெல்லி பயணம், தலைவர்கள், நண்பர்கள் சந்திப்பு என இருந்தநிலையில் சென்னை திரும்பினார். தலைச்சுற்றல் காரணமாகக் கடந்த 28 தேதி சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூன்று நாள் சிகிச்சைக்கு பின் தற்போது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பு நீக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்றார். அவரது குடும்பத்தினர் சிகிச்சை முடிந்து வந்த ரஜினிகாந்த்தை மகிழ்ச்சியாக வரவேற்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT