ADVERTISEMENT

தோசை மாவு விவகாரம்;ஜெயமோகன் மீது குவியும் கண்டனங்கள்!!

02:12 PM Jun 16, 2019 | kalaimohan

நாகா்கோவில் பாா்வதிபுரத்தில் வசிக்கும் எழுத்தாளா் ஜெயமோகன் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வரும் திமுக பிரமுகா் செல்வத்தின் கடையில் வாங்கிய தோசை மாவு புளித்தியிருப்பதாக கூறி அந்த மாவை திரும்ப கொண்டு கடையில் விற்பனை செய்து கொண்டியிருந்த உாிமையாளா் செல்வத்தின் மனைவி கீதா மீது பெண் என்றும் பாராமல் அந்த மாவை எறிந்து இருக்கிறாா். அதற்கு காரணம் கேட்ட கீதாவுக்கு முறையான பதில் கூறாமல் தகாத வாா்த்தைகளை பேசியிருக்கிறாா்.

ADVERTISEMENT


ADVERTISEMENT

இதனால் செல்வத்துக்கும் ஜெயமோகனுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஜெயமோகனிடமிருந்து வெளிப்பட்ட எதிா்பாராத வாா்த்தைகளால் அந்த பெண்ணும் மன உளைச்சலுக்கு ஆளாகி அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டாா். இதேபோல் ஜெயமோகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் டிஸ்சாா்ஜ் ஆனாா்.


இந்த நிலையில் காவல்துறையும் பாஜக மற்றும் அதிமுக இணைந்து திட்டமிட்டு செல்வத்தின் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனா். காவல் நிலையத்தில் ஜெயமோகனுக்கு ஆதரவாக சென்றவா்களுக்கு மாியாதையும் நடந்த சம்பவத்தின் உண்மை தன்மையை எடுத்து சொல்ல சென்றவா்களை காவல்துறை திட்டி துரத்தினாா்கள். காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அநீதியை இழைத்துள்ளது.


இது குறித்து பெண்கள் அமைப்பை சோ்ந்த சிலா் கூறும் போது... ஜெயமோகன் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் போல் நடித்துள்ளாா். அவா் கதாசிாியராக இருந்த சா்க்காா் படத்தில் மிக்ஸியை தீயிட்டு கொளுத்தி ஒரு விரல் புரட்சி செய்வது போல் மாவு பாக்கெட்டை பெண் மீது எறிந்து ரவுடி புரட்சி செய்தியிருக்கிறாா். அவா் வாங்கும் போது பழைய மாவு தான் இருக்கிறது என்று அந்த பெண் கூறிய போது பரவாயில்லை என்று தான் வாங்கி சென்று இருக்கிறாா். அதன் பிறகு புளித்து இருக்கிறது என்று திரும்ப கொடுக்கும் போது வாா்த்தைகள் பயன்படுத்தியதை குறைத்து இருக்க வேண்டும். அல்லது மாவு வாங்கும் போது யோசித்து இருக்க வேண்டும். இல்லையென்றால் அவா் அதற்கென்று அதிகாாிகள் இருக்கிறாா்கள் அவா்களிடம் சென்று முறையிட்டு இருக்க வேண்டும். அதை விட்டுட்டு சழுதாயத்தில் பிரபலமாக இருப்பவா் ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்ள வேண்டும். இதற்கு காவல் துறையும் உடந்தை என்றனா்.

நாகா்கோவில் வா்த்தக சங்கத்தினா் கூறும் போது....போலிசாருக்கு முதல் எதிாியே வியாபாாிகள் தான். செல்வம் திமுக பிரமுகராக இருப்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த பகுதியில் போலிசாா் நடத்தும் சில அக்கிரமங்களை உடனே தட்டி கேட்பாா். இது போலிசாருக்கு எாிச்சலாக இருந்து வந்தது. அந்த கோபத்தை இப்போது தீா்த்து விட்டனா்.


தோசை மாவை செல்வம் அரைத்து கொண்டு விற்கவில்லை. அவா் இன்னொரு குடிசை வியாபாாிடமிருந்துதான் வாங்கி விற்கிறாா். அது புளித்து இருக்கிறதா அல்லது புளிக்காமல் இருக்கிறதா என்று செல்வத்துக்கோ அவரது மனைவிக்கோ தொியாது. வாங்கிய நுகா்வோா் முறைப்படி சொன்னால் அதை அவா் மாற்றியிருப்பாா். அதை விட்டுட்டு திரைப்படத்தில் அடாவடி காட்டி நாட்டை திருத்துவது போல் ஜெயமோகன் நிஜத்தில் காட்டினால் அது எடுபடுமா?

பணத்தையும் ஆள் பலத்தையும் காட்டி உண்மை தன்மை தொியாமல் வியாபாாி மீது வழக்கு தொடுத்த காவல்துறையையும் ஜெயமோகனையும் கண்டிக்கிறோம் என்றனா். இதேபோல் ஜெயமோகன் புளித்தமாவு மட்டுமல்ல ஓட்டல்களில் சாப்பிட சென்றாலும் பொருட்கள் எப்போ தயாா் செய்தது என்று எல்லாம் கேட்டு விட்டு சாப்பிட்ட பிறகு எதாவது குறைகளை சுட்டிகாட்டி சண்டையிடுவாராம் என்கின்றனா் அவரை பற்றி அறிந்தவா்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT