Writer Ponnilan is good

சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர் பொன்னீலன். அவர்கன்னியாகுமரி மாவட்டத்தில் மணிகட்டிபொட்டல்என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.அவருக்கு 80 வயது முடிந்து 81 வயது நடந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் சென்ற கடந்த 14ஆம் தேதி இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.அதன் பிறகு குலசேகரப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் அவசரசிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். நலமாக உள்ளார். அவருக்கு இருதயத்தில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்று 18தேதி மருத்துவர்கள் ஆஞ்ஜியோகிராம் என்ற பரிசோதனை செய்ய உள்ளார்கள். இந்தநிலையில் தமிழகம் முழுக்க உள்ள எழுத்தாளர்கள்,இலக்கியவாதிகள் அவர்களுக்கு என்ன ஆயிற்று இன்று வினவி வந்தனர்.

Advertisment

அவர் நலமோடு இருப்பதாகவும்,மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும்அவருடன் உள்ள மூத்த மகள் தெரிவித்துள்ளார்.இதுகுறித்த கேட்கையில்அவரது மூத்த மகள்டாக்டர் அழகுநிலா நம்மிடம்,''அப்பா நன்றாக இருக்கிறார். எந்த பிரச்சினையும் இல்லை''என கூறினார்.

Advertisment

தமிழகத்தில் மிகச்சிறந்த இடதுசாரி எழுத்தாளர்களில்முக்கியத்துவம் வாய்ந்தவர் எழுத்தாளர் பொன்னீலன்.அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு முற்போக்கு எழுத்தாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவர் நலம் பெற்று வருகிறார் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது.