ADVERTISEMENT

சென்னையில் 896 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்டப் பகுதிகள்!

10:12 PM Sep 18, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,653 ஆக குறைந்தது. இதில் செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைந்த நிலையில், சென்னையில் 204 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னையில் கரோனா தொற்று அதிகமுள்ள 896 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 தெருக்களில் 5 பேருக்கு மேலும், 166 தெருக்களில் 3 பேருக்கு மேலும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 203 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்." இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "பண்டிகை காலங்களில் தொற்று பரவாமல் தடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்; மக்களும் உஷாராக இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் ஒரு மாதத்தில் தடுப்பூசி செலுத்த முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT