Advice of the Corporation of chennai for Private Corona Testing Laboratories

Advertisment

சென்னையில் கரோனாபரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்களுக்கு சென்னை மாநகராட்சி சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, சென்னையில் கரோனாபரிசோதனை மேற்கொள்ளப்படும் தனியார் ஆய்வகங்களில் கரோனாபரிசோதனை செய்ய வருபவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தனியார் ஆய்வகங்கள் பெறவேண்டும். பரிசோதனைக்கு வருபவரிடம்ஆதார் இல்லாவிடில் பரிசோதனை முடிவு வரும்வரை அவரைதனிமைப்படுத்தப்படுத்த வேண்டும். பரிசோதனைக்கு வருவோரின் தொலைபேசி எண்களை உறுதிப்படுத்திய பின்னரே சோதனை மேற்கொள்ள வேண்டும். தங்கள் முழு விவரத்தையும் பெறவில்லை என்றால்சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனசென்னை மாநகராட்சி தனியார் ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.