ADVERTISEMENT

800 படத்தில் அரசியல் கிடையாது... -தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

07:25 PM Oct 14, 2020 | kalaimohan

ADVERTISEMENT

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியானது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல் ஈழ தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியது.

இந்நிலையில் முத்தையா முரளிதரன் வாழ்க்கை தொடர்பான படத்தில் அரசியல் கிடையாது என திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. முழுக்க முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படம் தான் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT