ADVERTISEMENT

8 ஆயிரம் கோடி ஈர்ப்பு... விரைவில் இஸ்ரேல் பயணம்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்! 

08:21 AM Sep 10, 2019 | kalaimohan

தனது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் மூலமாக 8,000 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுமுறை பயணமாக அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்டார். சுமார் பதிமூன்று நாட்கள் மேற்கொண்ட இந்த சுற்றுப்பயணத்தின் முடிவாக இன்று காலை அவர் தாய்நாடு திரும்பினார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அந்த நாடுகளில் வசித்த வெளிநாடுவாழ் தமிழர்களையும், தொழில் முதலீட்டாளர்களை சந்தித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு தொழில்முனைவோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்புவிடுத்தார். இன்று காலை சென்னை திரும்பிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விமானநிலையத்தில் அக்கட்சியினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் தொழில் தொடங்க தொழில்முனைவோர் தயாராக இருப்பதாகவும், தான் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக 8,835 கோடி அளவிற்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுற்றுப்பயணம் குறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சித்தது குறித்து பதிலளித்த எடப்பாடி, தாம் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றதில் இருந்து மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு குரல் எழுப்பி வருவதாக குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில் தனது வெளிநாட்டு பயணம் தொடரும் என்றும், விரைவில் நீர் மேலாண்மை குறித்து அறிந்துகொள்ள இஸ்ரேல் செல்லவிருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT