ADVERTISEMENT

‘மீண்டும்... மீண்டுமா...’ மருந்தக ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி

11:45 AM Oct 07, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மருந்தக ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி வரவு வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தேனாம்பேட்டை பகுதியினைச் சேர்ந்த மருந்தக ஊழியரான முகமது இத்ரிஸ் என்பவரது கோட்டக் மகேந்திரா வங்கி கணக்கில் ரூ.753 கோடி கிரெடிட் வரவு வைக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைப்பார்த்து மருந்தக ஊழியர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் மெர்கண்டைல் வங்கியிலிருந்து தவறுதலாக ரூ. 9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டு, பின்பு வங்கி நிர்வாகம் பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டது. இதேபோன்று தஞ்சாவூரில் நேற்று ஒருவரின் வங்கி கணக்கில் ரூ. 750 கோடி வரவு வைக்கப்பட்டு பின்பு வங்கி நிர்வாகத்தால் திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில் மூன்றாவது முறையாக சென்னையை சேர்ந்த மருந்தக ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி வரவு வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வங்கி நிர்வாகம் பணத்தை திரும்ப பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT