ADVERTISEMENT

கரோனா தடுப்பிற்கு 7,167 கோடி செலவு -துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு   

01:42 PM Sep 15, 2020 | kalaimohan

ADVERTISEMENT

கரோனா தொற்று காரணமாக போதிய இடவசதிகள் இல்லாததால் சென்னை கோட்டையில் நடைபெற வேண்டிய சட்டசபை கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு நேற்று சட்டமன்றம் கூடியது. இன்று இரண்டாம் நாளாக சட்டமன்ற கூட்டம் நடந்துவரும் நிலையில், இன்றையை கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் கரோனா தடுப்பு பணிக்காக அரசு செய்த செலவினங்கள் குறித்து பேசினார்.

ADVERTISEMENT

அதில், மொத்தமாக கரோனா தடுப்பிற்காக தமிழக அரசு 7,167.97 கோடி செலவு செய்துள்ளது. ரேஷன் மற்றும் நிவாரண தொகையாக 4,890.05 கோடியும், தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக 638.85 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது, மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் வாங்க 830.60 கோடியும், மருத்துவ கட்டுமான பணிக்கு 147.10 கோடியும், தனிமைப்படுத்துவதற்காக 262.25 கோடியும் தமிழக அரசு செலவிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் கூடுதல் பணியாளர்களின் ஊதியம், உணவிற்கு 243.50 கோடியும், வெளிமாநில தொழிலாளர்களுக்காக 143.63 கோடியும் செலவிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT