ADVERTISEMENT

7 பேர் விடுதலை... ஆளுநர் எதிர்ப்பு?

08:56 AM Oct 18, 2019 | kalaimohan

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏற்கனவே அதிகாரபூர்வமற்ற முறையில் ஆளுநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் எழுத்துப்பூர்வமாக இதுவரை தமிழக அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அந்த அமைச்சரவை பரிந்துரை மீது கடந்த ஓராண்டாக ஆளுநர் பன்வாரிலால் தரப்பிலிருந்து எந்த முடிவும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

2014 மற்றும் 16 ஆம் ஆண்டுகளில் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கைகளை கடந்த ஆண்டு நிராகரித்த மத்திய உள்துறை அமைச்சகம் அவர்களை விடுவிப்பது அபாயகரமான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும், சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தது. உள்துறை அமைச்சகம் கூறியிருந்த அதே நிலைப்பாட்டையே தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT