ADVERTISEMENT

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை!

10:31 AM Nov 24, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (24.11.2023) முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். கேரளாவில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்தமான் தீவுகளில் நவம்பர் 26, 27 மற்றும் 28 ஆகிய 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே சமயம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் நவம்பர் 26 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து 27 ஆம் தேதி தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக அடுத்து வரும் நாட்களில் கனமழையின் தாக்கம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT