ADVERTISEMENT

 60 லட்சம் ரூபாய் அபராதம்! இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பினால் தூத்துக்குடி மீனவர்கள் சோகம்

08:05 PM Oct 15, 2018 | nagendran

ADVERTISEMENT

ADVERTISEMENT


தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர்கள் எட்டு நபர்களுக்கு 3 மாத சிறைத் தண்டனையுடன், தலா ஒருவருக்கு 60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது இலங்கை கல்பிட்டி நீதிமன்றம்.

கச்சத்தீவினை தாரை வார்த்ததிலிருந்து இன்று வரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களும், படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைப்படுத்தப்படுவதும் வழக்கமான ஒன்று. அவ்வகையில், கடந்த மாதம் 18.08.2018 ந் தேதி தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற எட்டு மீனவர்களையும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் காரணத்தைக் கூறி கைது செய்து சிறையில் அடைத்தது இலங்கை கடற்படை.

மீனவர்களின் வழக்கு இன்று கல்பிட்டி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரிக்கப்பட, வழக்கை விசாரித்த நீதிபதியோ., " மீனவர் ஒருவருக்கு தலா 60 லட்சம் ரூபாய் அபராதமும், வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வரை மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனையும் அளித்து உத்தரவிட்டார். இதனை அடுத்து மீனவர்கள் 8 பேரையும் புத்தளம் சிறையில் அடைத்தது இலங்கை அரசு. இலங்கை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் தூத்துக்குடி மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT