ADVERTISEMENT

மீன் ஏற்றி சென்ற ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து 6 பேர் படுகாயம்

01:15 PM Jun 28, 2018 | Anonymous (not verified)

நாகூரில் மீன் ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 6 பேர் படுகாயத்துடன் நாகை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்கள் சாலையில் கொட்டி நாசமாகின.

ADVERTISEMENT

நாகூரில் இருந்து நாகையை நோக்கி விற்பனைக்காக மீன் ஏற்றி கொண்டு வியாபாரிகளுடன் ஷேர் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் நிலைதடுமாறிய ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ADVERTISEMENT

விபத்தில் டிரைவர் உட்பட ஆட்டோவில் பயணித்த மீன் வியாபாரிகள் கலா, சுமித்ரா, மகேஸ்வரி, ஜெயப்ரியா மற்றும் எதிரே சைக்கிளில் வந்த விஷால் ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் விற்பனைக்காக எடுத்து சென்ற 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்கள் சாலையில் கொட்டி நாசமாகின. விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT