ADVERTISEMENT

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 6 பேர்... 15 கிலோ மீட்டருக்கு அப்பால் கண்டெடுக்கப்பட்ட உடல்!

11:04 PM Dec 07, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், மேற்குத் தொடர்சி மலையை ஒட்டியுள்ள கல்லாற்றுப் பகுதியில் பெரியகுளம், தென்கரை பகுதியைச் சேர்ந்த செல்லராமு, ராமசாமி மற்றும் அவர்களுடைய நண்பர்கள் என மொத்தம் 6 இளைஞர்கள் குளிக்கச் சென்றனர்.

அப்போது, மேற்குத் தொடர்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, கல்லாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆற்றில் குளிக்கச் சென்ற 6 இளைஞர்களும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். வெள்ளநீரில் சிக்கிய 6 பேரில், 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதில், ராமசாமி என்பவருக்குக் காயம் ஏற்பட்ட நிலையில், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், காணாமல்போன செல்லராமு என்பவரை 30-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் நள்ளிரவு முதல் தேடிய நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் தீயணைப்புத் துறையினர் மற்றும் செல்லராமுவின் உறவினர்கள், 4 குழுக்களாகப் பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இளைஞர்கள் குளித்த இடத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேல்மங்களம் பகுதியில், வராகநதி ஆற்றுப் பகுதியில், உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் செல்லராமுவின் உடலைத் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

உயிரிழந்த செல்லராமுவின் உடல் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT