ADVERTISEMENT

ஒரே இரவில் 560 ரவுடிகள் கைது - தமிழ்நாடு காவல்துறை அதிரடி!

09:59 AM Sep 24, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் குற்றங்களைத் தடுக்கும் விதமாக ரவுடிகளிடம் நள்ளிரவில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ரவுடிகளை ஒடுக்க அவர்களின் வீடுகளிலும் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள சுமார் 50 ரவுடிகளின் வீடுகளில் அதிரடியாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையில் நடந்த இந்த சோதனையில், ரவுடிகளின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோல், அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 37 ரவுடிகளை காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை போலீசார் பிடித்து எச்சரித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு முழுவதும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ஒரே இரவில் 560 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுதும் கைதான ரவுடிகளிடமிருந்து 256 அரிவாள்கள், 3 துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 700 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டதோடு கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT