ADVERTISEMENT

லாரிகள் அதிரடி சோதனை - காவல்துறை, வருவாய்த்துறையினர் நடவடிக்கை!

04:37 PM Mar 02, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி இன்று காலை சிதம்பரம் கடலூர் சாலையில் வந்த சில லாரிகளை பிடித்துச் சோதனை செய்தார். அவற்றில் சில லாரிகளில் எம்-சாண்ட் மணல், ஜல்லி உள்ளிட்டவற்றை அதிக பாரத்துடன் ஏற்றிவந்தது தெரியவந்தது.

இதையடுத்து தீவிர விசாரணை நடத்தும்படி சிதம்பரம் கலெக்டர் உத்தரவிட்டார். இதனடிப்படையில் சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன், சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. லாமேக் உள்ளிட்டோர் சிதம்பரம் புறவழிச்சாலை, சின்னகுமட்டி, முட்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 50 லாரிகளை அதிரடியாக நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஒரு சில லாரிகளின் டிரைவர், லாரியை விட்டுவிட்டு ஓடி விட்டனர். இதையடுத்து லாரிகளுக்கு உரிய பர்மிட் உள்ளதா? ஜல்லி, எம்-சாண்ட் மணல் உள்ளிட்டவை எங்கிருந்து எங்கு எடுத்துச் செல்லப்படுகிறது எனத் தீவிர சோதனை நடத்தினர்.

இதில் சில லாரிகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது அது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே உரிய ஆவணங்கள் இருந்தும், பெரும்பாலான லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. கூடுதல் பாரம் ஏற்றிவந்த 20க்கும் மேற்பட்ட லாரிகளை போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் எடைமேடை நிலையத்திற்கு எடுத்துச் சென்று எடை போட்டனர். அப்போது கூடுதலாகப் பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் காவல்துறையும், வருவாய்த் துறையும் இணைந்து அதிரடி நடவடிக்கை எடுத்து லாரிகளைப் பிடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT