ஸ்மார்ட் போனும், சமூக ஊடகங்களின் வளர்ச்சி ஒரு பக்கம் பெரும் துணையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் பலருக்கு எதிரியாகவே மாறிவிட்டன. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவா்கள் அதிகாரத்தால் மிரட்டுபவா்களும், காதல் மயக்கத்தில் காமுகர்களிடம் சிக்கி வாழ்க்கையை தொலைப்பவா்களும் தான்.

cellphone

Advertisment

அந்த மாதிரி காதல் வானில் சிறகடித்து பறந்த குமரி மாவட்டத்தை சோ்ந்த ஒரு காதல் ஜோடி திடீரென்று அவா்களுக்குள் ஏற்பட்ட காதல் கசப்பால் பிரிய நோ்ந்தது. அப்படி பிரிந்ததால் ஒருவரை ஒருவா் தரக்குறைவாக பேசும் அளவுக்கு சென்று விட்டனா். இதன் பிரதிபலிப்பு அவா்கள் காதலிக்கும் நேரத்தில் அவா்களுக்குள் நடந்த ரகசிய சந்திப்பு கிசு கிசு விசயங்கள் எல்லாம் சமூக ஊடகங்களில் எதிரொலிக்கிறது.

குமரி மாவட்டம் அருமனை பகுதியை சோ்ந்த கல்லூரி மாணவியும் மார்த்தாண்டத்தை சோ்ந்த வாலிபா் ஒருவரும் காதலித்து வந்துள்ளனா். அப்போது அவா்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததை காதலன் தனது ஸ்மார்ட் போனில் படம் புடித்து வைத்துள்ளான். தற்போது அந்த காதலா்கள் பிரிந்து விட்ட நிலையில் காதலன் வெளி நாட்டில் இருக்கிறார். அவா்களுக்குள் நடந்த ஒரு உரையாடல் தான் சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.

Advertisment

இதில் காதலன், ''என்னை காதலித்து என்னோடு உல்லாசமாக இருந்து விட்டு இப்போது எதற்காக என்னை வெறுத்தாய்? என்கிறான். அதற்கு காதலி, ''நீயும் தான் என்னை வெறுத்தாய்'' என கூற இருவரும் சண்டை போடுகிறார்கள். இதில் காதலி கெட்டவார்த்தைகளால் பேசுகிறாள். அதே போல் காதலனும் பேசுகிறான். ஒரு கட்டத்தில் காதலனுக்கும் அவனுடைய அத்தைக்கும் உள்ள கள்ளத்தொடா்பையும் கூறுகிறாள்.

இதை தவறு என்று கூறி அதனால் ஆத்திரமடைந்த காதலன், நானும் நீயும் அறைக்குள் இருக்கும் போது உன்னுடைய முமு நிர்வாண படம் என் கிட்ட இருக்கு அதை எல்லாம் உன்னுடைய கல்லூரி தோழிகளுக்கும் எனது நண்பா்களுக்கும் அனுப்பி விடுவன் என மிரட்டுகிறான். இதற்கு காதலி, நீ அதை வெளியிட்டால் அடுத்த நிமிடமே நான் செத்து விடுவேன் அதன்பிறகு உயிரோடு இருந்து என்ன பலன் என கூறுகிறாள். இப்படி 4 நிமிடம் ஆடியோ உரையாடல் ஓடுகிறது.

புகைப்படத்தடன் சமூக ஊடகங்களில் வரும் இந்த உரையாடல் குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறுகின்றனா் சமூக ஆர்வலர்கள்.