ADVERTISEMENT

ஒரு வயது குழந்தையை 1 லட்சத்துக்கு விற்பனை – தாய் உட்பட 5 பேர் கைது.

02:44 PM Sep 25, 2019 | Anonymous (not verified)

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் சத்யா. திருப்பத்தூர் தில்லை நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முருகன் என்பவருடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சத்யா, ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து கணவர்களை பிரிந்த நிலையில் மூன்றாவதாக முருகனை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். முருகனுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ளார். சத்யா இவருக்கு இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடதக்கது.

ADVERTISEMENT

முருகன் – சத்யா இருவரின் திருமண வாழ்வின் அடையாளமாக ரேணுகாதேவி என்ற மகளும் ஆதித்தியா என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை ஆதித்தியா பிறந்து ஒரு வருடம் ஆன நிலையில் முருகன் காசநோயால் பாதிக்கப்பட்டு தர்மபுரியில் தங்கி அங்குள்ள அரசு மருத்துவமனையிலேயெ சிகிச்சைக்கு பெற்றுள்ளார். கடந்த வாரம் வாணியம்பாடி திரும்பி வந்துள்ளார். வந்தவர் தனது பிள்ளைகளை கேட்க, மகள் ரேணுகாதேவி மட்டும் இருந்துள்ளார். குழந்தை ஆதித்யா இல்லாமல் இருப்பதை கண்டு எங்கு குழந்தை என கேள்வி கேட்டுள்ளார். குழந்தை காணோம், யார் தூக்கிக்கிட்டு போனாங்கன்னு தெரியல என சாதாரணமாக சொல்லியுள்ளார்.

ADVERTISEMENT

இதில் சந்தேகமடைந்த முருகன், வாணியம்பாடி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சத்யாவை அழைத்து விசாரித்த போலிஸாரிடம், எனது பெரியம்மா கீதா, தெரிஞ்சவங்க ஆண் குழந்தை கேட்கறாங்க, வித்துடறியான்னு கேட்டாங்க. நானும் சரின்னு சொன்னன் கவிதா என்பவர் மூலமாக பெங்களூர் ஜெய்நகர் பகுதியை சேர்ந்த ரஹமத் ஷகிலா தம்பதியினருக்கு ஒரு லட்சத்திற்கு ரேட் பேசி விற்று தந்தார்கள். அட்வான்ஸாக ரூபாய் 65 ஆயிரம் தந்துவிட்டார்கள். மீதி பணம் வரவேண்டும். குழந்தையை விற்று இரண்டு மாதம் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் பேரில் செப்டம்பர் 24ந்தேதி பெங்களூர் ஜெயநகர் பகுதிக்கு சென்ற வாணியம்பாடி கிராமிய காவல்நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார், குழந்தையை விலைக்கு வாங்கி சென்ற ரஹமத் ஷகிலா தம்பதியினர் வீட்டுக்கு சென்று குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தையை விற்ற தாய் சத்யா, அவருக்கு உதவிய அவரது பெரியம்மா கீதா, இடைத்தரகர் கவிதா ஆகியோரை வாணியம்பாடி அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் இவர்கள் 5 பேரும் கைது செய்யப்படுவார்கள் எனக்கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT