style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பின் தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை துண்டித்தபெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நந்திவழி என்ற இடத்தில் 42 வயதுக்கார பெண்ணை கடந்த இரண்டு வாரங்களாக பின் தொடர்ந்து தொல்லை செய்துவந்த நபர் அந்த பெண்ணின் கணவரிடமே அவரை காதலிப்பதாக கூறியுள்ளான். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் திக்குமுக்காடி வந்துள்ளார்அந்த பெண்.
இந்நிலையில் மீண்டும் அந்த பெண்ணை அந்த நபர் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவனுக்கு உரிய பாடம் புகட்டவேண்டும் என எண்ணிதிட்டமிட்டு அந்த பகுதியில் உள்ள தேஜாஸ் மாத்ரே,பிரவீன்கனியா என்ற இரு இளைஞர்களின் உதவியுடன் அந்த நபரைதனி இடத்திற்கு கொண்டு சென்று சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதனால் நிலைகுலைந்த அந்த நபரின் ஆணுறுப்பை அந்த பெண் துண்டித்துள்ளார். அந்த நபர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இளைஞர்கள் இருவர் அந்த பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.