ADVERTISEMENT

நடுக்கடலில் மிதந்த மூட்டைகள்... போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

10:07 PM Apr 05, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலில் மிதந்து வந்த 25 லட்சம் ரூபாய் மதிப்புடைய கஞ்சா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் தஞ்சையில் நிகழ்ந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே சோமசுந்தரம் என்ற மீனவர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது. கடலிலிருந்து சுமார் ஏழு நாட்டிக்கல் தூரத்தில் சுமார் 5 மூட்டைகள் சந்தேகப்படும் வகையில் மிதந்துள்ளது. அந்த மூட்டைகளைச் சேகரித்து படகில் ஏற்றிக்கொண்டு கரைக்கு திரும்பிய மீனவர் சோமசுந்தரம் இது குறித்து அதிராம்பட்டினம் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தார். அதனையடுத்து கடலோரப் படை கொடுத்த தகவலின் அடிப்படையில் நாகை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோமசுந்தரத்திடம் இருந்து மூட்டைகளை வாங்கி அதனைச் சோதனை செய்தனர். அதில் சிறு சிறு பொட்டலங்களாக சுமார் 160 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 25 லட்சம் ரூபாய் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுக் கடலில் மிதந்து வந்த கஞ்சா பொட்டலங்கள் யாரால் கொண்டுவரப்பட்டது, எதனால் கடலில் மிதக்கவிடப்பட்டது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT