Published on 24/02/2022 | Edited on 24/02/2022

திருச்சியில் 21 கிலோ கஞ்சா விற்கும் போதே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த சென்னை நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வம், ராம்ஜிநகர் சேர்ந்த சுசீலா என்ற இருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 3 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுள்ளது.