ADVERTISEMENT

47 கிலோ வெள்ளி பொருட்கள், பறக்கும் படையினரால் பறிமுதல்...!

03:22 PM Mar 04, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்குப் பணம், உணவு மற்றும் பரிசுப் பொருட்களை உள்ளிடவற்றை வழங்குவதை தடுக்கும் பணியில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டு ரோட்டில், நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் கணேசன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சேலத்தில் இருந்து கும்பகோணம் செல்வதற்காக வந்துகொண்டிருந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில் ஆவணம் இன்றி, சுமார் 30 லட்சம் மதிப்பிலான, 47 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதைக் கண்டறிந்த பறக்கும் படையினர், அவற்றை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெள்ளி பொருட்களை எடுத்துச் சென்றவர் கும்பகோணத்தைச் சேர்ந்த சசிகுமார் என்றும், அவர் நகைக்கடை வைத்திருப்பதால் சேலத்தில் இருந்து வாங்கி சென்றார் என்றும் தெரியவந்தது.

ஆனால் உரிய ஆவணம் இன்றி பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதால், அவற்றைப் பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள், விருத்தாச்சலம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வெள்ளிப் பொருட்களை எடை பார்த்த பின்பு, பெட்டியில் சீல் வைத்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் விருத்தாசலத்தை அடுத்த ராஜேந்திரபட்டினம் கிராமத்தில், சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர், உரிய ஆவணம் இன்றி வைக்கோல் வாங்குவதற்காக, கிருஷ்ணகிரியில் இருந்து லாரி மூலம் ஜெயங்கொண்டம் சென்ற தர்மன் என்பவரிடம் 86,500 ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்து தாசில்தார் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT