கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சந்திப்பில் இருந்து, ஆத்தூர் வழியாக சேலம் செல்லும் ரயில் வழித்தடத்தில் கடந்த காலங்களில் டீசல் இன்ஜின் மூலம் இரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் 120 கோடி ரூபாய் முதலீட்டில், மின்சாரம் மூலம் ரயில் இயங்குவதற்கான பணிகள் நடைபெற்று முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து 10 ரயில்வே பெட்டிகளுடன், விருத்தாசலம் - சேலம் செல்லும் மின்சார ரயிலின், சோதனை ஓட்டம் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
ரயில்வேத்துறை பாதுகாப்பு ஆணையர் ராய் தலைமையில் நடந்த சோதனை ஓட்டத்தில், முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக ரயில் இன்ஜினுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சூடம் ஏற்றி வழிபாடு செய்து அனுப்பி வைத்தனர்.