ADVERTISEMENT

தமிழக அரசின் கடன் 4.56 லட்சம் கோடியாக இருக்கும்... ஓபிஎஸ் பட்ஜெட் உரை 

10:26 AM Feb 14, 2020 | kalaimohan

2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் மீதான உரையை தொடங்கினார்.

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவையில் 10 ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துவருகிறார் ஓபிஎஸ். 15 ஆவது சட்டப்பேரவையில் அதிமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் முக்கிய அறிவிப்புகள்,புதிய திட்டங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

தற்பொழுது தொடங்கிய நிதியமைச்சர் ஓபிஎஸ்ஸின் உரையில்,

நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 4.56 லட்சம் கோடியாக இருக்கும் என தெரிவித்த ஓபிஎஸ்,

நீரை சிக்கனமாக பயன்படுத்தி திருத்திய நெல் சாகுபடி முறைக்கு 27.18 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தப்படும். தமிழக பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு 6,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு, 11.1 லட்சம் ஏக்கர் நெல் விதைப்பு முறை நாகை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கைக்கு விரிவுபடுத்தப்படும்.

பொது விநியோக திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு 400 கோடி மானியம். மின்சார துறைக்கு 20,115 கோடி, கல்விதுறைக்கு 34,181 கோடியும், தொல்லியல்துறைக்கு 39.93 கோடியும், கீழடியில் புதிய அகழ்வைப்பகம் அமைத்திட 12.21 கோடியும், பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடியும், உயர்கல்வி துறைக்கு 5,052.84 கோடியும், மருத்துவதுறைக்கு 15,839 கோடியும், பெண்கள் பாதுகாப்பான நிர்பயா திட்டத்திற்கு தமிழக பட்ஜெட்டில் 71 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT