ADVERTISEMENT

நூறு கோடி ரூபாய் மோசடி... இந்தியன் வங்கி மேலாளர் உட்பட 3 பேர் வீடுகளில் சி.பி.ஐ ரெய்டு! 

11:49 PM Jul 27, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை துறைமுகத்தில் நூறு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்தவர் சேர்மதிராஜா. இவர் இந்தியன் வங்கியின் கோயம்பேடு கிளை மேலாளராக இருந்தார். இவருடைய உதவியோடு கடந்த ஆண்டு சென்னை துறைமுகத்தில் 100 கோடி ரூபாய் பணம் பல்வேறு வங்கி கணக்குகள் மூலம் மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தகவல் அறிக்கையை அதிகாரிகள் பதிவு செய்தனர். அதில் வங்கியின் மேலாளர் சேர்மதிராஜா, சென்னை துறைமுகத்தின் துணை இயக்குனர் எனக் கூறி மோசடி செய்த கனேஷ் நடராஜன் மற்றும் இடைத்தரகர் மணிமொழி ஆகியோர் விசாரணை வளையத்திற்கு கீழ் வந்த நிலையில், இவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இடைத்தரகராக செயல்பட்ட மணிமொழியை சி.பி.ஐ போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த மூன்று பேரின் வீட்டிலும் சி.பி.ஐ சோதனை நடத்திவருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT