ADVERTISEMENT

நடுக்கடலில் படகு கவிழ்ந்த சம்பவம் - 2 மீனவர்கள் மீட்பு;8 மீனவர்களை தேடும் பணி தீவிரம்!

07:15 PM Sep 04, 2019 | kalaimohan

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த செப்.2 ஆம் தேதி திங்கள்கிழமை புதிய படகு வாங்குவதற்காக கடலூருக்கு சென்றனர்.

அங்கிருந்து போட்டியா எனப்படும் புதிய ரக நாட்டுப்படகை வாங்கிக்கொண்டு, மறுநாள் (செப்.3) செவ்வாய்கிழமை ராமேஸ்வரம் திரும்பி கொண்டிருந்தனர். படகில் நாகசாமி மகன் முனியாண்டி (47), ஆண்டி மகன் ரஞ்சித்குமார் (23), காந்தி மகன் மதன், ஆறுமுகம் மகன் இலங்கேஸ்வரன் (20), காந்தி மகன் தரைக்குடியான், ராமகிருஷ்ணன் மகன் காந்தி குமார் (23), முனியாண்டி மகன் செந்தில்குமார் (31), சண்முகம் மகன் முனீஸ்வரன் (24), ராஜ் மகன் உமாகாந்த் (19), ராஜா மகன் காளிதாஸ் (29) ஆகியோர் இருந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கடந்து உச்சிப்புளி அருகே நடுக்கடலில் சென்ற போது திடீரென படகு கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படகில் இருந்த 10 மீனவர்களும் கடலுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர்.

அதில் செந்தில்குமார், காளிதாஸ் என்ற இரண்டு மீனவர்களும் பிளாஸ்டிக் கேனை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் மிதந்துள்ளனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது படகில் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செந்தில்குமார், காளிதாஸ் ஆகிய இரண்டு மீனவர்களையும் உயிரோடு மீட்டுக் கொண்டு வந்து சேதுபாவாசத்திரம் கடலோர காவல்படை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட மீனவர்கள் தந்த தகவலின் பேரில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திற்கு கிழக்கே உச்சிப்புளி அருகே படகு, கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.


இதையடுத்து சேதுபாவாசத்திரம் கடலோர காவல்படை ஆய்வாளர் சுபா, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோர காவல்படை அலுவலகத்திற்கு தகவல் அளித்தார். புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம் மாவட்ட கடலோர காவல் படையினர், தொடர்ந்து 8 மீனவர்களையும் தேடி வருகின்றனர். மேலும் மத்திய மீம்புக்குழுவினரும் ஹெலிக்காப்டர் மூலம் தேடி வருகின்றனர். மேலும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களிடமும் தேடும் பணிக்காக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீட்கப்பட்ட 2 மீனவர்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT