ADVERTISEMENT

வாக்கு எண்ணும் மையத்தில் லேப்டாப்புடன் ரவுண்டடிக்கும் 170 பேர்...- பதறும் வேட்பாளர்கள்!

07:29 AM Apr 18, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெல்லை மாவட்டத்திலடங்கிய திருநெல்வேலி, பாளை, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நெல்லையிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் அனைத்தும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் காட்சிகள் கண்ட்ரோல் ரூமிலுள்ள டி.வி. ஒளித்திரையில் தெரியும்படி மாணிட்டர் செய்யப்பட்டு அதிகாரிகள், காவலர்கள், வேட்பாளர்களின் முகவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மூன்றடுக்குப் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த மையத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டுள்ளது தெடர்பாக தி.மு.க.வின் வேட்பாளர்கள் மாவட்டக் கலெக்டரான விஷ்ணுவிடம் புகாரும் கொடுத்துள்ளனர். இதனிடையே இந்தக் கல்லூரிக்குள் 170 பேர்கள் தினமும் சென்று வர கலெக்டரால் அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

லேப்டாப் பையுடன் வலம் வரும் அந்த நபர்கள் நேரம் காலமில்லாமல் கல்லூரிக்குள் நினைத்த நேரம் வந்து செல்கிறார்களாம். யார் எப்போது எதற்காக வந்து போனார்கள் என்ற குறிப்பும் கிடையாதாம். வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு யாரும் செல்லமுடியாத தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இங்கே இவர்கள் வந்து செல்வதைக் கண்டித்தும் சந்தேகத்திற்கிடமாகிறது என்று தி.மு.க.வின் வேட்பாளரும் மா.செ.க்களான ஆவுடையப்பன், அப்துல்வகாப் மற்றும் அப்பாவு ஆகியோர் இதுகுறித்து மாவட்டக் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. கரோனா காலத்தில் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் கல்லூரியின் பணியாளர்கள் என்று 170 பேர்கள் அங்கு சென்றுவர அனுமதித்துள்ளார் கலெக்டர். லேப்டாப்புடன் அவர்கள் வந்து செல்வது வாக்கு இயந்திரப் பாதுகாப்பில் சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. உடனே அவர்களை நிறுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளோம். அவரும் ஒப்புதலளித்திருக்கிறார். தவறினால் கட்சித் தலைமை மூலம் நடவடிக்கை எடுப்போம் என்கிறார் வேட்பாளரான அப்பாவு.

தென்காசி மாவட்டத்தின் 5 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கொடிக்குறிச்சியின் யு.எஸ்.பி. கல்லூரியின் ஸ்ட்ராங்க் ரூமில் மின்தடை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கண்ட்ரோல் ரூமில் மின்தடை இல்லை. இது பிரச்சினையாக உருவெடுத்து பின்பு தி.மு.க. மா.செ. சிவபத்பநாபன் மூலம் கலெக்டரிடம் புகாரும் செய்யப்பட்டு, விளக்கமளிக்கப்பட்ட அடுத்த நாள், அங்குள்ள சங்கரன்கோவில் தொகுதியின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி.யின் காட்சிகள் கண்ட்ரோல் ரூமில் வைக்கப்பட்டுள்ள டி.வி.திரையில் ஒரு சிறிய பகுதி மறைப்பது தெரிய வந்திருக்கிறது. இந்தத் தொகுதியில் அமைச்சர் ராஜலெட்சுமி போட்டியிடுகிறார். இதனை சிவபத்மநாபன் மாவட்டக் கலெக்டரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்கிறார். அதனைப் பணியாளர்கள் ஆய்வு செய்ததில் கேமராவின் லென்சில் சிறிய சணல் ஒன்று இருந்ததால்தான் காட்சிகள் மறைந்தது என்று அதனை நீக்கியுள்ளனர். எனினும் ஸ்ட்ராங்க் ரூமில் மறைக்கும் படியான சம்பவத்தை நாங்கள் எதேச்சையாக நடந்தது என நினைக்கவில்லை. வேண்டுமென்றே மறைக்கப்பட்டதாகச் சந்தேகப்படுகிறோம். மேலும் சங்கரன்கோவில் தொகுதியில் பல்வேறு சம்பவங்கள் நடப்பதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகச் சொல்கிறார் மா.செ. சிவ பத்மநாபன்.

வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை இடையேயான வெகு நாட்கள் காலதாமதத்திற்கிடையே வாக்குப்பெட்டி மையங்களில் நடப்பவைகளால் கதிகலங்கிப் போயுள்ளனர் தி.மு.க. வேட்பாளர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT