ADVERTISEMENT

2 மணி நேரத்திற்குள் தண்ணீர் திறப்பு 1,500 கனஅடியாக அதிகரிப்பு - செம்பரம்பாக்கம் அப்டேட்!

04:01 PM Nov 25, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'நிவர்' புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்மழையால், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து, வினாடிக்கு 4,000 கனஅடிக்கு அதிகமாக வந்துகொண்டிருக்கிறது.

24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டுவதால், முன்னெச்சரிக்கையாக இன்று மதியம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், ஏரியின் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளதால் நீர் திறப்பு 500 கன அடி அதிகரிக்கப்பட்டு, 1,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழை கடுமையானால் நீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT