nn

ஈரோட்டில் சுடு தண்ணீரில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி, கைக்கோளன் குட்டை ரோட்டை சேர்ந்தவர் செல்லபாண்டி (27). இவரது மனைவி சத்யா (23). இவர்களுக்கு ரித்திகா (6), சஸ்டிகா (6 மாதம்) என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 5ம் தேதி இரவு ரித்திகாவை குளிக்க வைப்பதற்காக அகலமான பாத்திரம் ஒன்றில் சத்யா, சுடு தண்ணீர் வைத்துள்ளார். தொடர்ந்து, அதில் குளிர்ந்தநீரைக் கலப்பதற்காக எடுத்து வர வீட்டுக்குள் சென்றபோது வெளியே விளையாடிக் கொண்டிருந்த ரித்திகா தவறிசுடு தண்ணீர் இருந்த பாத்திரத்துக்குள் விழுந்துவிட்டது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சத்யா குழந்தையை மீட்டுஅருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்தார்.

Advertisment

பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை ரித்திகா சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அதிகாலையில் உயிரிழந்தார். இதுகுறித்துபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.