ADVERTISEMENT

லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி; மடக்கிய பறக்கும் படை அதிகாரிகள்!

12:50 PM Oct 23, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை டூ பெங்களுரூ தேசிய நாற்கரச் சாலை, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வழியாகச் செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் நாட்றம்பள்ளி அருகேயுள்ள நெக்குந்தி பகுதியில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடி அருகே நின்று திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும் படை அதிகாரிகள், அக்டோபர் 22ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சென்னை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தினர் வட்ட வழங்கல் அதிகாரி குமார் தலைமையிலான அதிகாரிகள். லாரியை நிறுத்திய ஓட்டுநர், லாரியை அதிகாரிகள் சோதனை செய்தபோது லாரியில் இருந்து குதித்து இறங்கிய அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.

பின்னர் லாரியை சோதனை செய்ததில் அதில் 15 டன்னுக்கு மேல் ரேஷன் அரிசி இருப்பதை உறுதி செய்த பறக்கும் படை அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து வாணியம்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT