Skip to main content

வேப்பூர் பகுதியில் தொடரும் ரேஷன் அரிசி கடத்தல்; காவல்துறை கருப்பு ஆடுகள் உதவியா?

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

 Smuggling of Ration Rice Continues in Veypur Area- Are Police Black Goats Helping?

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் படி நேற்று (21.03.2023) மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் கண்ணன், ஏழுமலை மற்றும் காவலர்கள் முருகானந்தம், ராஜா ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேப்பூர் அடுத்த கழுதூர் கிராமத்தில் அமுதா என்பவரின் வீட்டின் அருகே வெள்ளை நிற சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து சந்தேகமடைந்த போலீசார் மூட்டையை சோதனை செய்ததில் ரேஷன் அரிசி 50 கிலோ வீதம் 22 மூட்டைகளில் சுமார் 1,100 கிலோ பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

 

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் வேப்பூர் அடுத்த விளம்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சார்லஸ் (28) என்பவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார்  சார்லஸை கைது செய்தனர்.

 

 Smuggling of Ration Rice Continues in Veypur Area- Are Police Black Goats Helping?

 

இதேபோல் நேற்று முன்தினம் (20.03.2023) வேப்பூர் அடுத்த மலையனூர் கிராமத்தில் நள்ளிரவு 12 மணியளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சிறுபாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று அங்கு சோதனை செய்ததில் 3000 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிய வந்தது.

 

இதையடுத்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட வேப்பூர் அடுத்த மங்களூரைச் சேர்ந்த பொன்னன் மகன் பரமசிவம் (48), மலையனூரைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் சத்யராஜ்(28), அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் செல்வம்(32), கட்சிமைலூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் கவியரசன்(32) ஆகிய நால்வரையும் சிறுபாக்கம் போலீசார் பிடித்து கடலூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் புலனாய்வுப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடத்த முயன்ற 3000 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மினி லாரி வாகனத்தை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் புலனாய்வுப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

 Smuggling of Ration Rice Continues in Veypur Area- Are Police Black Goats Helping?

 

கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான வேப்பூர் பகுதியில் இதுபோன்று அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகவும், அரிசி கடத்தலுக்கு  காவல்துறையில் உள்ள சில 'கருப்பு ஆடுகள்' அரிசி கடத்தும் வாகனத்துடன் சென்று மாவட்ட எல்லையைத் தாண்டி விட்டு விட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களாக காவல்துறையினரும், மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டதாலேயே தொடர்ந்து அரிசி கடத்தல் பேர்வழிகள் சிக்கி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.