ADVERTISEMENT

1.27 கோடி ரூபாய்க்கு ஏலம் போன கொப்பரை தேங்காய்

11:21 PM Jun 30, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன் கிழமைகளில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 3,643 மூட்டை கொப்பரைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

இதில் முதல் தர கொப்பரைகள் 1,947 மூட்டைகள் வரப் பெற்றிருந்தன. இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 70.00க்கும் அதிகபட்சமாக ரூ. 79.20க்கும் விற்பனையாகின. இரண்டாம் தர கொப்பரைகள் 1,696 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 20.21க்கும் அதிகபட்சமாக ரூ. 74.09க்கும் விற்பனையாகின. மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 1 கோடியே 27 லட்சம் என விற்பனை கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT