ADVERTISEMENT

''விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம்''- அமைச்சர் பிடிஆர் பேட்டி

08:02 PM Jun 15, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதற்கான விவரங்களைச் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவே விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மதுரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடத்தைத் திறந்து வைத்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களிடம் அரசு நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. அதன்படி 130 நிறுவனங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தது. அவற்றின் 25 நிறுவனங்களுடன் கொள்முதல் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. புதிய கண்டுபிடிப்புகளையும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக நிறுவனத்தின் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதற்கான விவரங்களைச் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நகைக்கடன் தள்ளுபடி, 4 ஆயிரம் ரூபாய் கடன் நிவாரண உதவி வழங்கியது போன்று தகுதியுடைய நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்களைச் சேகரித்து வருகிறோம். எவ்வளவு விரைவில் ஊக்கத்தொகை வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும்'' என நிதி அமைச்சர் உறுதியளித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT