ADVERTISEMENT

'உங்களுடைய கனவு பலிக்காது; உருட்டல் மிரட்டலுக்கு பயப்படமாட்டோம்' - இபிஎஸ் பேச்சு!

06:34 PM Apr 01, 2024 | kalaimohan

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'முன்பு கலைஞர் முதலமைச்சராக இருந்தார். அதற்கு பிறகு அவருடைய மகன் ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு இன்றைக்கு அவருக்கு ஒரு அமைச்சர் பதவியை கொடுத்து தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய அனுப்பி இருக்கிறார்கள். இது என்ன உங்கள் அப்பா வீட்டு சொத்தா? தமிழ்நாடு.

ADVERTISEMENT

ஏன் இங்கு இருப்பவர்களில் யாரும் வரக்கூடாதா? மேடையில் இருப்பவர்கள் வரக்கூடாதா? இது ஜனநாயக நாடு மு.க.ஸ்டாலின் அவர்களே. உங்களுடைய கனவு பலிக்காது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். வாரிசு அரசியல் இங்கு கிடையாது. இந்த தேர்தலோடு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் மக்கள். போகும் பக்கம் எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை சாடி பேசுகிறார். என்னைப் பற்றி தரக்குறைவாக பேசுகிறார். அரசியலுக்கு வந்து விட்டால் எல்லா விமர்சனங்களும் தாங்கக்கூடிய சக்தி எங்களுடைய தலைவர்கள் எங்களுக்கு வழங்கிய விட்டு சென்றுள்ளார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். எங்கள் தொண்டன் கூட பயப்பட மாட்டான். உங்களுடைய உருட்டல், மிரட்டல், அவதூறு பேச்சுக்கெல்லாம் அடிபணியும் கட்சி அதிமுக அல்ல''என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT