ADVERTISEMENT

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை திமுக கொண்டு வந்தது ஏன்?

12:07 PM May 07, 2019 | Anonymous (not verified)

தினகரன் ஆதரவு. எம்.எல்.ஏ.க்கள் மூணு பேரின் பதவி பறிப்பு சம்பந்தமா சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லைன்னு தி.முக.. மனு கொடுக்க, தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்னாடியே தமிழக அரசியல் மிகுந்த பரபரப்பாக இருக்கிறது. இதற்கு "மே 23-ந் தேதி, 22 தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள் தெரிகிற வரைக்கும் ஆளுந் தரப்புக்கு பதட்டம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்க பார்க்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தினகரன் பக்கம் போன 18 எம்.எல்.ஏ.க்கள் தவிர விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் பல மாதமாக தினகரனை ஆதரிச்சிக்கிட்டுதான் இருந்தாங்க.

ADVERTISEMENT



ஆனா இப்பதான் அந்த மூணு பேரும் தினகரனுக்கு ஆதரவா தேர்தல் பிரச்சாரம் செய்தாங்கன்னு குற்றம் சாட்டி, அவங்க பதவியைப் பறிக்கும் முயற்சியில் எடப்பாடி தரப்பில் கொறடா ராஜேந்திரன் களமிறங்க, சபாநாயகர் தனபால் மூலம் விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிருக்கிறார் அவர்களும் இதை நீதிமன்றத்தில் சென்று அணுகி தடை வாங்கியுள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட மூவரும் "நாங்க அ.தி.மு.க. தலைமையின் கீழேயே அதன் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்போம்'னு சபாநாயகருக்கு விளக்கம் அனுப்பியிருக்காங்க. அதை சபாநாயகர் ஏற்பதும் மறுப்பதும் அவர் விருப்பத்தைப் பொறுத்தது. இந்த நிலையில் அந்த சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான கடிதத்தை சட்டமன்றச் செயலாளர் சீனிவாசனிடம் தி.மு.க. கொடுத்து, பரபரப்பின் அளவை பல மடங்காக அதிகரிக்க வைத்தது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க முனையும் போது, தி.மு.க. ஏன் குறுக்கே வருதுன்னும், இதில் இருந்தே அந்த இரு கட்சிகளுக்கும் உள்ள உறவு தெரியுதேன்னும் முதல்வர் எடப்பாடி கூறியிருந்தார்.இதற்கு பதில் கூறும் விதமாக தி.மு.க. தரப்பு சபாநாயகரால் விளக்கம் கேட்கப்பட்டிருக்கும் அந்த மூன்று எம்.எல் .ஏ.க்களும் தினகரன் ஆதரவாளர்கள் என்பது இந்த உலகுக்கே தெரிஞ்ச விசயம்.

ADVERTISEMENT



அப்படியிருக்க ஆரம்பத்திலேயே அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கலை? இப்ப நடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்கள்ல தங்களுக்குச் சாதகமான முடிவுகள் இருக்காது என்பதைப் புரிஞ்சிக்கிட்ட எடப்பாடி தரப்பு, ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்று , மெஜாரிட்டி எண்ணிக்கையான 118-ஐக் குறைக்கும் வகையில், ஜனநாயகத்துக்கு விரோதமா இந்த மூவரையும் பதவி நீக்கம் செய்யப் பார்க்குது. இதைத் தடுக்கத்தான், எங்க கட்சி சார்பில் சபாநாயகர் மீது நம்பிகையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை சட்டசபைச் செயலாளரிடம் கொடுத்திருக்கிறோம்னு விளக்கம் கொடுத்தனர். மே 23க்கு பிறகு எந்த மாதிரி சூழல் வரும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் அதை வைத்தே நடவடிக்கை எடுக்கலாம்னு அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT