ADVERTISEMENT

திருவொற்றியூரில் ஏன் போட்டியிடுகிறேன்? ரகசியத்தை உடைத்த சீமான்!

12:46 PM Mar 20, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


தென்மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஒரு நாள் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரச்சார வாகனம் மூலம் தேர்தல் பரப்புரை செய்து வரும் சீமான், அன்றைய தினம் மாலையில் முக்கிய நகரங்களில் ஏற்படு செய்துள்ள பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசும் அவரது பேச்சுக்கள் ஏகத்தும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

நாகர்கோவிலில் நேற்று நடத்த பொதுக்கூட்டத்தில், “திருவொற்றியூர் தொகுதியில் நான் ஏன் போட்டியிடுகிறேன்?” என்கிற ரகசியத்தை உடைத்திருக்கிறார் சீமான். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “நம் தேசத்தில் அனைத்தும் தனியார் மயமாகிவிட்டது. சாலையின் பெயர் தேசிய நெடுஞ்சாலை, ஆனால் போடுவது தனியார் முதலாளி. லாபத்தில் போய்க்கொண்டிருந்த LIC தனியார்மயம், வானூர்தி நிலையம் கட்டுதல் தனியார் மயம், அதனை பராமரித்தல் தனியார்மயம், வானூர்தி சேவை தனியார்மயம்.

நான் இந்த நாட்டின் குடிமகன். எனக்கென்று ஒரு பொதுச்சொத்து இந்த நாட்டில் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை. சுடுகாடு மட்டும் தான் இருக்கிறது. அதுவும் எல்லாருக்கும் பொதுவாக இல்லை. சில சாதிகளுக்கு சுடுகாடே இல்லை. அப்போ எல்லாமே தனியார்மயம் என்றால் அரசின் வேலை என்ன? உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கும், சொந்தநாட்டு மக்களுக்கும் நடுவே தரகு வேலைப்பார்த்து கையெழுத்து போட்டு கமிஷன் வாங்குவதை தவிர அரசின் வேலை என்ன?

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டிற்கு ஒரு காரணம் சொல்கிறார்கள், 10 விழுக்காடு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடென்று. ஆனால் அவர்கள் முன்னேறிய வகுப்பினர்; முன்னேறிய சாதியினர் என்கிறார்கள். சாதி எப்படி முன்னேறும்? சரி, அவர் தான் முன்னேறி விட்டாரே பிறகெதற்கு இடஒதுக்கீடு? கல்வி கற்று, வேலைவாய்ப்பை பெற்று, சம்பளம் பெற்று, வாழ்வதுதான் முன்னேற்றம். சாதியால் எப்படி முன்னேற முடியும்?

சென்னையிலுள்ள திருவொற்றியூரில் போட்டியிடுகிறேன். ஏன், அங்கு நான் போட்டியிட வேண்டும்? என் சொந்த ஊர் காரைக்குடி தானே! காரைக்குடியிலே நிற்கலாம் தானே! காரைக்குடியில் நின்றிருந்தால் உறுதியாக நான் வெல்வேன். காரைக்குடியில எச்.ராஜாவும் இன்னொரு காங்கிரஸ்காரரும் போட்டியிடுறாங்க. நான் நின்றிருந்தால் இருவரையும் கதறவிட்டிருப்பேன். ஆனால், அங்கு போட்டியிடாமல் திருவொற்றியூரில் போட்டியிடுவதற்கு காரணம் இருக்கிறது. பொன்னேரியில் இருக்கும் காட்டுப்பள்ளியில் அதானி கட்டப்போகும் புதிய துறைமுகத்தின் நீட்சி எண்ணூர் வரை வருகிறது. எண்ணூர் பகுதி திருவொற்றியூர் தொகுதியில் இருக்கிறது. அந்த அதானியோடு சண்டை போடணும்; அந்த துறைமுகத்தை துரத்தணும். நின்னு சண்டைப் போட்டு துரத்தணும்ங்கிறதுக்காகத்தான் திருவெற்றியூரில் போட்டியிடுகிறேன்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT