ADVERTISEMENT

அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் யார் பேசலாம்? - சசிகலா பேட்டி

10:36 AM Mar 24, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் சட்டசபையில் பேசுவதற்கு உரிமை உள்ளது" என்கிறார் வி.கே.சசிகலா.

திருவாரூரில் நடைபெறவிருக்கும் உறவினர் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த வி.கே.சசிகலா நாகை அடுத்துள்ள வேளாங்கண்ணி சொகுசு விடுதியில் தனது உறவினர்களோடு தங்கியுள்ளார். அவரை ஓ.பி.எஸ். அணியின் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அங்கிருந்து திருவாரூர் புறப்பட்ட சசிகலாவிடம் சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், “சட்டமன்றம் மக்கள் பிரச்சனைகளை பேசும் இடம். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தாராளமாகப் பேசலாம். அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் பேசுவதற்கு உரிமை உள்ளது” என்றார்.

அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்கிற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, “இதனை அதிமுக தொண்டர்களிடம் கேட்க வேண்டும்” என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

சட்டமன்றத்தில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாகையில் ஓ.பி.எஸ். தரப்பினர் சசிகலாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT