ADVERTISEMENT

''சசிகலா என்ன புரட்சி செய்தார்...? கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் பொதுச்செயலாளரா?''-ஜெயக்குமார் விமர்சனம்!

12:44 PM Oct 17, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு தி.நகரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மாளிகையில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட சசிகலா கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். கட்சிக் கொடியை ஏற்றிவிட்டு கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்தார் சசிகலா. அந்த கல்வெட்டில் 'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா' என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக தரப்பில், அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டத்திற்கு விரோதமானது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து வரும் நிலையில் தற்பொழுது இந்த கல்வெட்டு மேலும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் ஜெயக்குமார் மீண்டும் விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ''புரட்சித் தாய் எனப் பெயர் வைத்துக் கொள்ளும் அளவிற்கு சசிகலா என்ன புரட்சி செய்தார். கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? அதிமுக பொன் விழா எழுச்சியுடன் நடைபெறுவது சசிகலாவிற்குப் பிடிக்கவில்லை. இத்தனை நாட்களாக வெளியே வராமல் பொன் விழா நடக்கும் போது வெளியே வருவது ஏன்? பாஜக எங்களைக் கட்டுப்படுத்த அதிமுக என்ன கை குழந்தையா?'' எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT